திருப்பதியில் இருப்பது பெருமாளா? காளியா? முருகனா?

 பேயாழ்வார் காலத்தில் வேங்கடவன்:

தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்

திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து          (63)

- - முதலாழ்வார்களில் பேயாழ்வார் திவ்ய பிரபந்தம் (6ஆம் கிறித்தவ நூற்றாண்டுக்கு முன்)








ராமானுஜர் ஹரிஹரனாக இருந்த திருப்பதியை பெருமாளாக மாற்றும்முன் இருந்தவாறு எனது கற்பனை AI.

வலதுபுறம் மழுவாகிய கோடரி ஏந்திய சிவனும், இடதுபுறம் சக்கரம் ஏந்திய பெருமாள்.

ராமானுஜர் செய்த பிரிவினை:

திருமலை கோவில் கருவறையில் வீற்றிருப்பது நாராயணனின் அம்சமா, சிவனின் அம்சமா? என்ற சர்ச்சை எழுந்தபோது, இதுபற்றி முடிவு செய்யும் பொறுப்பை ராமானுஜரிடம் விட்டுவிடுகிறான் மன்னன். இதையடுத்து கோவிலில் உள்ள திருமேனி முன்பு இலை நிறைய சைவர்களின் அடையாளமான திருநீற்றை ராமானுஜர் வைக்கிறார். அதேபோல் நாராயண அம்சமான சங்கு சங்கரத்தையும் வைக்கிறார்.

பின்னர் சிலையின் முன்பு நின்று, "எம்பெருமானே, நீ நாராயண அம்சம் என்றால் சங்கு சக்கரத்தை உன் மேனியில் தரித்துக்கொள், சிவனின் அம்சம் என்றால் திருநீற்றை பூசிக்கொள்" என்று கூறி சன்னதியின் கதவை அடைத்துவிடுகிறார்.

வைஷ்ணவ ஆச்சார்யர்களில் மிகவும் முக்கியமானவரான ராமானுஜர், திருப்பதியில் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார். குறிப்பாக, திருப்பதியை வைணவத் தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுஜர்தான்:

அவர் வாழ்ந்த காலத்தில் வேங்கடமலை மீது இருப்பது சைவ கோவிலா? வைணவ கோவிலா? கருவறையில் எழுந்தருளியிருப்பது சிவன் சிலையா? பெருமாள் சிலையா? என்ற சர்ச்சை ஏற்பட்டது. இரண்டு சமயத்தினரும் உரிமை கொண்டாடினர். அப்போது ராமானுஜர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார். திருமலை கோவில் கருவறையில் வீற்றிருப்பது நாராயணனின் அம்சமா, சிவனின் அம்சமா? என்ற சர்ச்சை எழுந்தபோது, இதுபற்றி முடிவு செய்யும் பொறுப்பை ராமானுஜரிடம் விட்டுவிடுகிறான் மன்னன். இதையடுத்து கோவிலில் உள்ள திருமேனி முன்பு இலை நிறைய சைவர்களின் அடையாளமான திருநீற்றை ராமானுஜர் வைக்கிறார். அதேபோல் நாராயண அம்சமான சங்கு சங்கரத்தையும் வைக்கிறார்.

பின்னர் சிலையின் முன்பு நின்று, "எம்பெருமானே, நீ நாராயண அம்சம் என்றால் சங்கு சக்கரத்தை உன் மேனியில் தரித்துக்கொள், சிவனின் அம்சம் என்றால் திருநீற்றை பூசிக்கொள்" என்று கூறி சன்னதியின் கதவை அடைத்துவிடுகிறார். இரவு முழுவதும் அனைவரும் காத்திருக்கின்றனர். மறுநாள் காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி சன்னதி கதவு திறக்கப்படுகிறது. எம்பெருமான் தனது சிலைத்திருமேனியின் தோள்களில் சங்கு, சக்கரத்தை ஏந்திக்கொண்டு நின்றார். பக்தர்கள் மெய்சிலிர்த்து அந்த சிலைத் திருமேனி நாராயணனின் அம்சம் என்று ஒப்புக்கொண்டனர்.

இவ்வாறு திருப்பதி தலத்தை வைணவத் தலம் என்பதை உறுதிப்படுத்திய ராமானுஜர், கோவிலில் பல்வேறு திருப்பணிகளை செய்தார். மழு, சக்கராயுதங்களின் மேல்,கழற்ற இயலாத சங்கு, சக்கர தங்க கவசங்களை முறை மாற்றி வைத்தார். வைணவமல்லாத பழமையான கல்வெட்டுகளை உடைத்தார். ஆகமத்தை பாஞ்சராத்திர, வைகானச வைணவாகமங்களாக மாற்றினார்.

Comments