Posts

Showing posts from November, 2025

திருப்பதியில் இருப்பது பெருமாளா? காளியா? முருகனா?

Image
  பேயாழ்வார் காலத்தில் வேங்கடவன்: தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும் திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து          (63) - - முதலாழ்வார்களில்  பேயாழ்வார் திவ்ய பிரபந்தம் (6ஆம் கிறித்தவ நூற்றாண்டுக்கு முன்) ராமானுஜர் ஹரிஹரனாக இருந்த திருப்பதியை பெருமாளாக மாற்றும்முன் இருந்தவாறு எனது கற்பனை AI. வலதுபுறம் மழுவாகிய கோடரி ஏந்திய சிவனும், இடதுபுறம் சக்கரம் ஏந்திய பெருமாள். ராமானுஜர் செய்த பிரிவினை: திருமலை கோவில் கருவறையில் வீற்றிருப்பது நாராயணனின் அம்சமா, சிவனின் அம்சமா? என்ற சர்ச்சை எழுந்தபோது, இதுபற்றி முடிவு செய்யும் பொறுப்பை ராமானுஜரிடம் விட்டுவிடுகிறான் மன்னன். இதையடுத்து கோவிலில் உள்ள திருமேனி முன்பு இலை நிறைய சைவர்களின் அடையாளமான திருநீற்றை ராமானுஜர் வைக்கிறார். அதேபோல் நாராயண அம்சமான சங்கு சங்கரத்தையும் வைக்கிறார். பின்னர் சிலையின் முன்பு நின்று, "எம்பெருமானே, நீ நாராயண அம்சம் என்றால் சங்கு சக்கரத்தை உன் மேனியில் தரித்துக்கொள், சிவனின் அம்சம் என்றால் திருநீற்றை பூ...